டிசம்பர் 15-ல் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தேர்தல்

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
டிசம்பர் 15-ல் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தேர்தல்

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: 

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவுக்கு பின்வரும் தேர்தல் கால அட்டவணை 03.12.2021 நாளிட்ட தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்தல்   - 06.12.2021 (திங்கட்கிழமை)  (முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை)

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் - 08.12.2021 (புதன்கிழமை) (பிற்பகல்  3.00 மணிக்கு முன்னர்)    

வேட்புமனு சரிபார்த்தல்-  09.12.2021 (வியாழக்கிழமை) (பிற்பகல் 1.00 மணிக்குள்)

வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்- 10.12.2021 (வெள்ளிக்கிழமை) (பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர்)

வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும் நாள்  - 13.12.2021 (திங்கட்கிழமை)    

தேர்தல் அவசியமானால் 15.12.2021 (புதன்கிழமை) அன்று ஓட்டுப்பதிவு காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகம், நெ.1. ஜாபர்சிராங்தெரு, வள்ளல் சீதக்காதி நகர், சென்னை-600 001-ல் நடைபெறும்.

16.12.2021 (வியாழக்கிழமை) அன்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com