
போடிமெட்டு மலைச்சாலையில் சாய்துகிடக்கும் மரங்கள்.
போடி: போடிமெட்டு மலைச்சாலையில் மீண்டும் பாறை சரிவு ஏற்பட்டதால் போடியிலிருந்து கேரளம் செல்லும் வாகன போக்குவரத்து வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டுள்ளது.
போடி பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் போடிமெட்டு மலைச்சாலையில் அடுத்தடுத்து பாறை சரிவு, மண் சரிவு, மரங்கள் சாய்வதுமாக இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் உடனுக்குடன் சரி செய்து வந்தனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் போடிமெட்டு மலைச்சாலையில் பாறை சரிவு, மண் சரிவு ஏற்பட்டு சாய்துகிடக்கும் மரங்கள்.
இதனிடையே போடிமெட்டு மலைப் பகுதியில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. இதில் பல இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. ஒரு இடத்தில் பாறையுடன் சேர்ந்து பெரிய மரம் சரிந்து போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியவில்லை.
இதையும் படிக்க | வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்க மேலும் 3 மாதங்கள் அவகாசம்
இதனையடுத்து வாகனங்கள் அனைத்தும் போடி முந்தல் சோதனை சாவடியிலும், போடிமெட்டில் உள்ள தமிழக சோதனை சாவடியிலும் நிறுத்தப்பட்டன.
போடி பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் போடிமெட்டு மலைச்சாலையில் சாய்துகிடக்கும் மரங்கள்.
தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பாறை, மண் சரிவுகளை அகற்றும் பணியை ஜே.சி.பி. இயந்திரங்கள மூலம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தமிழக-கேரளம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | திருச்சியில் குடியிருப்பு பகுதியில் மழைநீர்: பொதுமக்கள் சாலை மறியல்
சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.