
திருச்சி: சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வியாழக்கிழமை இரவு வந்த ஸ்கூட் ஏர்வேஸ் விமான பயணி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா என கண்டறிவதற்கான
மரபணு பரிசோதனைகள் நடந்து வருகிறது.
சோதனை முடிவுகள் வந்த பிறகே ஒமைக்ரான் பாதிப்பா என்பது தெரியவரும் என (திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர்) அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.
தொற்று உறுதி செய்யப்பட்ட விமான பயணி திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.