Enable Javscript for better performance
மல்லவாடி அரசு மறுவாழ்வு இல்லத்துக்கு புதிய கட்டடம்: ஸ்டாலின் திறந்து வைத்தார்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு தமிழ்நாடு

    மல்லவாடி அரசு மறுவாழ்வு இல்லத்துக்கு புதிய கட்டடம்: ஸ்டாலின் திறந்து வைத்தார்

    By DIN  |   Published On : 03rd December 2021 04:21 PM  |   Last Updated : 03rd December 2021 04:21 PM  |  அ+அ அ-  |  

    Tamil nadu CM MK Stalin meeting with District collectors ahead of heavy rain

    மல்லவாடி அரசு மறுவாழ்வு இல்லத்துக்கு புதிய கட்டடம்: ஸ்டாலின் திறந்து வைத்தார்

     

    சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவையாற்றியவர்களுக்கு மாநில விருதுகளை வழங்கி, ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மல்லவாடி - அரசு மறுவாழ்வு இல்லத்திற்கான புதிய கட்டடத்தை திறந்து வைத்து, பார்வை குறைவுடையோருக்கு பணி நியமன ஆணைகளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

    மு.க.ஸ்டாலின் இன்று (03.12.2021) தலைமைச் செயலகத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களுக்கு மாநில விருதுகளை வழங்கினார்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த முறையில் சேவைபுரிந்ததற்காக சிறந்த சமூகப் பணியாளர் விருதினை செல்வி.ஸ்மிதா சாந்தகுமாரி சதாசிவன் அவர்களுக்கும், சிறந்த நிறுவனத்திற்கான விருதினை விருதுநகர் மாவட்டம் - சப்தகிரி மறுவாழ்வு அறக்கட்டளைக்கும், சிறந்த ஆசிரியருக்கான விருதினை செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்ததற்காக ரா.ஜெயந்திக்கும், பார்வை குறைவுடையோருக்கு கற்பித்ததற்காக ந.மாரியம்மாளுக்கும், சிறந்த பணியாளர்/ சுயதொழில் புரிபவர் விருதினை சீ. மாதேஸ்வரன், மு.ரு. ரேவதி மெய்யம்மை, முனைவர் ர. இராஜா, வே. தங்ககுமார், ஜோயல் ஷிபு வர்க்கி, சு. அப்துல்லத்தீப், செல்வி அனுராதா, செல்வி சே. சரண்யா, ஜீ. கணேஷ் குமார் ஆகியோருக்கும், ஆரம்பநிலை பயிற்சி மையத்தில் பணிபுரியும் சிறந்த ஆசிரியருக்கான விருதினை தே. முத்துச்செல்வி மற்றும் கா.சர்மிளா ஆகியோருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநருக்கான விருதினை ஏ.ரதீஷ அவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய நடத்துநருக்கான விருதினை சி.திருவரங்கம் அவர்களுக்கும் தமிழக முதல்வர் வழங்கி, பாராட்டினார். 
    மேற்காணும் விருது பெறும் நபர்கள் / நிறுவனங்களுக்கு தலா 10 கிராம் எடையுள்ள 22 கேரட் தங்கப்பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் முதன்முதலாக தொழுநோயால் பாதிப்படைந்தவர்களின் மறுவாழ்விற்காக பரனூரில் 1971-ஆம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அரசு மறுவாழ்வு இல்லம் தொடங்கப்பட்டது.

    தற்போது தமிழ்நாட்டில் பத்து அரசு மறுவாழ்வு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. உணவு, உறைவிடம், உடுக்க உடை, மருத்துவ வசதிகள் இல்லவாசிகளுக்கு வழங்கப்படுகின்றன. மேலும், இல்லவாசிகளுக்கு பாய் நெய்தல், துணி நெய்தல், தையல் மற்றும் காலணி தயாரிப்பு போன்ற பல்வேறு தொழிற் பயிற்சி அளிக்கப்படுவதுடன் அவர்களால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கேற்ப ஊதியமும் வழங்கப்படுகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மல்லவாடியில் அரசு மறுவாழ்வு இல்லம் 1973-ஆம் ஆண்டு 425 பயனாளிகள் தங்கும் வகையில் 14,300 சதுர அடி நிலப்பரப்பில் கட்டடம் கட்டப்பட்டது. இந்த அரசு மறுவாழ்வு இல்லக் கட்டடம் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் இருப்பதால், இல்லவாசிகளின் நலன் கருதியும், அவர்களின் பயன்பாட்டிற்காகவும், மல்லவாடி அரசு மறுவாழ்வு இல்லத்திற்கு 1 கோடியே 64 இலட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 

    இந்த மறுவாழ்வு இல்லத்தில் 40 நபர்கள் தங்கும் வகையில் 20 தங்கும் அறைகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது இவ்வில்லத்தில் 36 இல்லவாசிகள் தங்கி பயன்பெற்று வருகின்றனர்.

    மேலும், மாவட்ட நூலக ஆணைக் குழுக்களின் கீழ் செயல்படும் மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலியாகவுள்ள நூல் கட்டுநர் மற்றும் நூல் கட்டும் உதவியாளர் பணியிடங்களுக்கு பூவிருந்தவல்லி அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் புத்தகம் கட்டும் பயிற்சி முடித்த பார்வை குறைவுடையோருக்கு சிறப்பு நேர்வாக நூல் கட்டுநர் பணியிடத்திற்கு 17 நபர்களுக்கும், நூல் கட்டும் உதவியாளர் பணியிடத்திற்கு 14 நபர்களுக்கும், என மொத்தம் 31 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp