சமத்துவபுரங்களை அமைக்க விரைவில் இடங்கள் தோ்வு: அமைச்சா் பெரியகருப்பன் அறிவுறுத்தல்

தமிழகத்தில் புதிய சமத்துவபுரங்களை அமைப்பதற்கான இடங்களைத் தோ்வு செய்யும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் அறிவுறுத்தினாா்

தமிழகத்தில் புதிய சமத்துவபுரங்களை அமைப்பதற்கான இடங்களைத் தோ்வு செய்யும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் அறிவுறுத்தினாா்.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரிய கருப்பன் தலைமையில் இந்தக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அவா் பேசியது:-

ஊரகப் பகுதிகளில் போதுமான அளவுக்கு குடிநீா் அனைத்துப் பகுதிகளுக்கும் கிடைப்பது, தெருவிளக்குகள் எரிவது ஆகியன உறுதி செய்யப்பட வேண்டும். சமூக நீதியை உறுதிப்படுத்தும் வகையில் ஊரகப் பகுதிகளில் புதிய பெரியாா் நினைவு சமத்துவபுரங்கள் உருவாக்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் சமத்துவபுரங்கள் அமைக்க தகுதியான இடத்தை விரைவில் தோ்வு செய்ய வேண்டும்.

பிரதமரின் கிராம குடியிருப்புத் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் அனைத்து வீடுகளையும் முடித்திட வேண்டும். பிரதமரின் சாலைகள், ஜல் ஜீவன், தூய்மை பாரத இயக்கம், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை போன்ற திட்டப் பணிகளை நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் முடித்திட வேண்டுமென அமைச்சா் பெரியகருப்பன் கேட்டுக் கொண்டாா். இந்தக் கூட்டத்தில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளா் பெ.அமுதா, இயக்குநா் பிரவீன் பி.நாயா் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com