மரக்கன்றை நட்டு வைக்கிறார் முதல்வர் நித்ய கெளரி.
மரக்கன்றை நட்டு வைக்கிறார் முதல்வர் நித்ய கெளரி.

கூத்தாநல்லூர் சுல்தானா மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் சுல்தானா அப்துல்லாஹ் இராவுத்தர் மகளிர் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் சுல்தானா அப்துல்லாஹ் இராவுத்தர் மகளிர் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட மேலப்பனங்காட்டாங்குடி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தொடங்கிய முகாமிற்கு, கூத்தாநல்லூர் நகர மன்ற முன்னாள் தலைவர் கே.ஜெயராஜ் தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் லயன்ஸ் சங்கத் தலைவர் ப.முருகையன், தலைமையாசிரியர் வி.சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் டி.சுதா வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர், சுல்தானா அப்துல்லாஹ் இராவுத்தர் மகளிர் கல்லூரி முதல்வர் எஸ்.நித்ய கெளரி, தொடக்கப்பள்ளி, கல்லூரி வளாகம் மற்றும் மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோர் பயிற்சி பள்ளி வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மரக்கன்றுகளை நட்டு, முகாமை தொடங்கி வைத்தார். வணிகவியல் துறை விரிவுரையாளர் பி.மாலா நன்றி கூறினார்.

தொடர்ந்து டிச.11 ஆம் தேதி(சனிக்கிழமை) தியானம் மற்றும் யோகாப் பயிற்சி, டிச.12 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோயில் உழவாரப் பணி, மருத்துவ முகாம், டிச.13 ஆம் தேதி (திங்கள்கிழமை) பள்ளி வளாகத் தூய்மை, கைத்தொழில் பயிற்சி, டிச.14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம், சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டி, மருத்துவ முதலுதவி, டிச.15 ஆம் தேதி (புதன்கிழமை) நிலவேம்பு குடிநீர் வழங்கல் மற்றும் சமத்துவப் பொங்கல் உள்ளிட்ட பல்வேறு விதங்களில் நடத்தப்படுகிறது. டிச.16 ஆம் தேதி நிறைவு விழா நடைபெறுகிறது. முகாம் ஏற்பாடுகளை, முதல்வர் நித்ய கெளரி, திட்ட அலுவலர் டி.சுதா, துணை திட்ட அலுவலர் பி.மாலா மற்றும் மாணவிகள் கவனித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com