
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி விழா எட்டாம் திருநாளான சனிக்கிழமை காலை மூலஸ்தானத்திலிருந்து முத்து கிரீடம் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி விழா 8 ஆம் திருநாளான சனிக்கிழமை காலை மூலஸ்தானத்திலிருந்து முத்து கிரீடம் சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி திருவிழாவில் பகல்பத்து நாளன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் எழுந்தருளும் நம்பெருமாளுக்கு வைரம், வைடூரியம், முத்து, பவளம் என பலவிதமான ஆபரணங்கள் அணிவிக்கப்படுகின்றன.
வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் பரமபதவாசல் திறப்பன்று கருவறையிலிருந்து பாண்டியன் கொண்டை, கிளி மாலை, ரத்தின அங்கியுடன் புறப்பட்டு சிம்மக்கதியில் வரும் நம்பெருமாளைத் தரிசிக்க திரளும் பக்தர்களே இதற்கு சாட்சியாகும்.
வைகுந்த ஏகாதசி பகல் பத்து எட்டாம் நாளான சனிக்கிழமை அர்ச்சுன மண்டபத்தில் முத்து கிரீடம், ரத்தின அபயஹஸ்தம் , ரத்தின மகர பண்டிகை , முத்துச்சரம், அடுக்கு பதக்கம் அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.