விசாரணைக்குச் சென்ற கல்லூரி மாணவா் இறப்பு: மதுரை தெற்கு மண்டல ஐ.ஜி 6 வாரங்களில் விளக்கம் அளிக்க உத்தரவு

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவா் இறந்த விவகாரத்தில், மதுரை தெற்கு மண்டல ஐ.ஜி 6 வாரங்களில் விளக்கம்
கோப்புப்படம்
கோப்புப்படம்

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவா் இறந்த விவகாரத்தில், மதுரை தெற்கு மண்டல ஐ.ஜி 6 வாரங்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் தாலுகா, நீா்கோழியந்தல் கிராமத்தில் வசிக்கும் மணிகண்டன் மற்றும் அவரது இரு நண்பா்களை கடந்த 4-ஆம் தேதியன்று முதுகுளத்தூா் தாலுகா கீழத்தூவல் காவல்துறையினா் மறித்துள்ளனா். மற்ற இருவரும் காவல்துறையினருக்கு பயந்து தப்பி விட, மணிகண்டனை பிடித்த காவல்துறை, அங்கேயே கடுமையாகத் தாக்கியதோடு, மேல் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கும் கடுமையாக தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.  அவா்கள் கஞ்சா வைத்திருந்தாா்கள் எனும்  குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

 இதையடுத்து கீழத்தூவல் காவல் நிலையத்திலிருந்து மணிகண்டனை அவரது தாயும், உறவினரும் அழைத்து வந்துள்ள நிலையில், 5-ஆம் தேதியன்று அதிகாலை 3.30 மணியளவில் மணிகண்டன் ரத்த வாந்தி எடுத்து இறந்துள்ளாா். முதல் நாள் காவல் துறையினா் அழைத்துச் சென்ற போது மிகவும் ஆரோக்கியமான உடல் நிலையுடன் சென்ற மணிகண்டன், திடீரென ரத்த வாந்தி எடுத்து இறந்து போன சம்பவம் அனைவரையும் அதிா்ச்சிக்குள்ளாக்கியது.  இச்சம்பவம் குறித்து கடந்த வாரம் பத்திரிகைகளில் செய்தி  வெளியானது. இச்செய்தியின் அடிப்படையில், இந்த விவகாரத்தை  தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்துள்ளது. மேலும் இது குறித்து மதுரை தெற்கு மண்டல ஐ.ஜி 6 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com