Enable Javscript for better performance
சென்னையில் நாளை மறுநாள் 15ஆவது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    சென்னையில் நாளை மறுநாள் 15ஆவது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்

    By DIN  |   Published On : 16th December 2021 08:21 PM  |   Last Updated : 16th December 2021 08:21 PM  |  அ+அ அ-  |  

    corona_vac

    சென்னையில் நாளை மறுநாள் 15ஆவது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கரோனா தடுப்பூசி ஒன்றே சிறந்த தீர்வாக உள்ளது. அதனால் தான் அரசின் சார்பில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி விலையில்லாமல் செலுத்தப்பட்டு வருகிறது. முதல்வரின் அறிவுறுத்தலின்படி, கரோனா தடுப்பூசி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
    அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் வார இறுதி நாட்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 1600 தடுப்பூசி முகாம்களுடன் மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை நடைபெற்ற 14 மெகா தடுப்பூசி முகாம்களில் 21,96,730 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிக்க- சில நாள்கள் சேர்ந்து வாழ்வதை லிவ் இன் ரிலேஷன்ஷிப்பாக கருது முடியாது: உயர் நீதிமன்றம்

    சென்னையில் இதுவரை 87% முதல் தவணை தடுப்பூசியும், 63% இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்து 8,26,471 நபர்கள் உள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியில் தற்பொழுது 5,92,095 கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 18.12.2021 அன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் 1600 கரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை நடத்தப்பட உள்ளன. 
    இந்த முகாம்கள் மூலம் சுமார் 4 இலட்சம் நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் உலக நாடுகளில் கரோனா வைரஸ் தொற்றில் மரபியல் மாற்றமடைந்த ஒமைக்ரான் வகை தொற்று பரவி வருகிறது. நம்முடைய அண்டை மாநிலங்களிலும் ஒருசில நபர்களுக்கு ஒமைக்ரான வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
    இந்நிலையில், நைஜீரியா நாட்டிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய ஒரு பயணிக்கு மரபியல் மாற்றமடைந்த ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று பாதித்தாலும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தினால் தீவிர சிகிச்சையின்றி உயிர் பாதுகாப்பு உள்ளது என பல்வேறு ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. 
    எனவே, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்துள்ள நபர்களும் அலட்சியமாக இல்லாமல் இந்தத் தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக் கொண்டு கரோனா தடுப்பூசியினை தவறாமல் செலுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp