Enable Javscript for better performance
கத்திப்பாரா சதுக்கம்: திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கத்திப்பாரா சதுக்கம்: திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

    By DIN  |   Published On : 16th December 2021 01:07 PM  |   Last Updated : 16th December 2021 02:45 PM  |  அ+அ அ-  |  

    kathipara

    கத்திப்பாரா சதுக்கம்: திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்


    சென்னையில், ரூ.14.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (16.12.2021) சென்னை, கத்திப்பாராவில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் நிதியுதவியுடன், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பில் பன்முகப் போக்குவரத்துகளை ஒருங்கிணைத்து, பயணிகள் ஒரு போக்குவரத்திலிருந்து மற்றொரு போக்குவரத்திற்கு மாறிச் செல்வதற்கும், பொதுமக்கள் மற்றும் பயணிகள் இளைப்பாறி செல்லும் வகையிலும், கத்திப்பாரா மேம்பாலத்திற்கு கீழ் உள்ள இடங்களில் 14 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    இதையும் படிக்க.. ஒமைக்ரானிலிருந்து மீண்டவர் சொல்வதைக் கேளுங்கள்..

    கத்திப்பாரா சந்திப்பு சென்னை நகரின் குறிப்பிடத்தக்க பெரிய அடையாளங்களின் ஒன்றாகவும், சென்னை நகரின் நுழைவாயிலாகவும் அறியப்படுகிறது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய குளோவர் இலை வடிவமைப்புடன் கூடிய மேம்பாலம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

    இம்மேம்பாலம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 2008-ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

    ஆசியாவிலேயே மிகப்பெரிய குளோவர் இலை வடிவமைப்புடன் கூடிய மேம்பாலமாக இருப்பதால் பூங்கா மற்றும் சிறார் விளையாடுமிடம் ஆகிய வசதிகளுடன் கூடிய நகர்ப்புற சதுக்கமாக 14 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் நிதியுதவியுடன் மேம்படுத்த திட்டமிடப்பட்டது.

    கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கம், அனைத்து பெரிய சாலைகளுடனும், வடக்கில் ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ நிலையம், தெற்கில் ஆலந்தூர் மெட்ரோ நிலையம் மற்றும் கிழக்கில் கிண்டி மெட்ரோ நிலையம் ஆகிய மெட்ரோ நிலையங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இடம் நகரப் போக்குவரத்துடன் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டு, மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள், நகர்ப்புறச் சதுக்கத்தில் தற்போது யு-திருப்பம் (யு-டர்ன்) மேற்கொள்ள முடியும்.

    சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் ஒரு மைல் கல்லாக கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

    எந்த நேரமும் சுறுசுறுப்புடன் இயங்கும் சந்திப்பின் இடையே இளைபாறும் பகுதியாக அமைந்துள்ளதுடன் நகரத்தின் இதுமாதிரியான இடங்களில் இதுவே முதலாவதாகும்.

    நகர்ப்புறச் சதுக்கத்தின் வடிவமைப்பு நவீன சென்னையின் அடையாளத்தையும், கலாச்சாரப் பெருமையையும் பிரதிபலிக்கிறது. மேலும், கைவினைப் பொருள் அங்காடி, உணவுக்கூடம், பசுமைப் பகுதியுடன் கூடிய சிறார் விளையாடுமிடம் ஆகியவையும், 128 சீருந்துகள் மற்றும் 340 இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வாகன நிறுத்தங்கள் மற்றும் 8 பேருந்து நிறுத்தங்கள் ஆகியவைகளும் அமைக்கப்பட்டுள்ளன. குளோவர் இலை வடிவமைப்புப் மேம்பாலத்தின் கீழ் அமைந்துள்ளதால், இந்த இடம் இயற்கையாகவே 4 பகுதிகளாக பிரிந்து மேம்படுத்தப்பட்டுள்ளது. 

    அதன் விவரங்கள் பின்வருமாறு:-
    பகுதி-1 விமானநிலைய அணுகு பகுதி : (நேரு சிலை அருகில்) இருக்கையுடன் கூடிய உணவுக் கூடங்கள், சில்லறை அங்காடிகள், பேருந்துநிறுத்தம் மற்றும் வாகன நிறுத்தம்.

    பகுதி–2 : போரூர் அணுகு பகுதி: சிறார் விளையாடுமிடம், சில்லறை அங்காடிகள், பேருந்துநிறுத்தம் மற்றும் வாகன நிறுத்தம்.

    பகுதி–3 : ஈக்காட்டுத்தாங்கல் அணுகு பகுதி : சில்லறை அங்காடிகள் மற்றும் பேருந்து நிறுத்தம்.

    பகுதி-4 : மொத்தமாக புல்வெளியுடன் மேம்படுத்தப்பட்ட பகுதி இந்த அனைத்து பகுதிகளும் சோலார் விளக்குகள், புல்வெளி விளக்குகள் மற்றும் அதிக வெளிச்சத்தை தரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதால், கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கம், சென்னை பெருநகர மக்கள் பெரிதும் விரும்பும் பகுதியாக அமைந்துள்ளது.

    இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் / முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ்., தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp