
தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 10,000 டன்கள் நிலக்கரி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சரை சந்தித்து தமிழநாடு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வலியுறுத்தினார்.
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி இன்று புதுதில்லியில் மத்திய அரசின் மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கை சந்தித்து 12 கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினார்.
இதையும் படிக்க- வங்கிக் கணக்கிலிருந்து பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கு வரை- கிரிப்டோகரன்சி ஒரு பார்வை
இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் பகிர்மான கழக இயக்குனர் மா.சிவலிங்கராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். அத்துடன் அனைத்து கோரிக்கைகள் மீதும் விரைவில் தீர்வு காணுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பு குறித்து அதாவது, 237.63 லட்சம் டன்கள் மத்திய அரசினால் அனுப்பப்பட வேண்டிய நிலையில், ஆண்டு ஒன்றுக்கு 171.10 லட்சம் டன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. முழுமையாக நிலக்கரி வழங்கி உரிய அளவு மின்சாரத்தை பெறும் வகையில் நாள் ஒன்றுக்கு 10,000 டன்கள் நிலக்கரி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகள் மனுவில் இடம்பெற்றிருந்தன.