
கோப்புப்படம்
திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பட்டப்பகலில் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலியை சேர்ந்தவர் தெய்வானை(45), இவருக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர் குடும்பத்துடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் வருகை தந்து கே.வி.ஆர் நகர் பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்து வருகிறார்.
இவர் அருகில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது உடன் பணிபுரிந்தவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது, பின்னர் நட்பாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் தெய்வானை தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அந்த நபரை வற்புறுத்தி வந்துள்ளார். அந்த நபர் ஏற்கனவே திருமணமானவர் என்பதால் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் அந்த நபருடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி அவர் மீது திருப்பூர் தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் தெய்வானை கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் தெரிவித்துள்ளார்.
இதையுடம் படிக்க | ரூ.95,910 சம்பளத்தில் இந்திய நாணய நிறுவனத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
காவல்துறையினர் இருவரிடமும் விசாரணை நடத்தி சமாதானம் பேசி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது, எனினும் தெய்வானை அந்த நபரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தும் எந்த பலனும் இல்லாததால் விரக்தியடைந்து தெய்வானை கே.வி.பி நகர் பகுதியில் வீதியில் நடு ரோட்டில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து பற்ற வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தெய்வானை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்து கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையுடம் படிக்க | வருமான வரித்துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பிப்பது எப்படி?