சென்னையில் டிச. 20 - 24 வரை கட்டடக் கழிவுகளை அகற்றும் பணி

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டடக் கழிவுகளை அகற்ற 20.12.2021 அன்று முதல் 24.12.2021 அன்று வரை தீவிர தூய்மைப் பணி நடைபெற உள்ளது. 
சென்னையில் டிச. 20 - 24 வரை கட்டடக் கழிவுகளை அகற்றும் பணி
சென்னையில் டிச. 20 - 24 வரை கட்டடக் கழிவுகளை அகற்றும் பணி

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டடக் கழிவுகளை அகற்ற 20.12.2021 அன்று முதல் 24.12.2021 அன்று வரை தீவிர தூய்மைப் பணி நடைபெற உள்ளது. 

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 
தமிழக முதல்வர் சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றும் வகையில் சிங்காரச் சென்னை 2.டி திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். அதனடிப்படையில் சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற அழகுப்படுத்தும் பணிகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அலுவலர்களுடன் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதனடிப்படையில் நீண்ட நாள்களாக தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டடக் கழிவுகளை அகற்றி சென்னையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் தீவிர தூய்மைப் பணி திட்டம் 27.05.2021 அன்று தொடங்கப்பட்டு தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு நீண்ட நாட்கள் தேங்கிய திடக்கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகாகவும் பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்கள் குறிப்பாக அரசு சுவர்கள், பாலங்கள், தூண்கள் போன்ற இடங்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டு, கண்கவரும் வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாநகரின் பசுமைப் பரப்பளவை அதிகரிக்கும் வகையில், மாநகரின் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு அவை தொடர்ந்து பராமரிக்கப்பட்டும் வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட குப்பைகள் மற்றும் கழிவுகள் மாநகராட்சியின் சார்பில் தீவிர தூய்மைப் பணியின் மூலம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக ஏற்பட்ட கழிவுகள் மற்றும் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டடக் கழிவுகளை முழுமையாக அகற்றிட ஏதுவாக 20.12.2021 அன்று தீவிர தூய்மைப் பணி தொடங்கப்பட்டு 24.12.2021 அன்று வரை நடைபெற உள்ளது.

இந்தத் திட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட 358 இடங்கள் தெரிவு செய்யப்பட்டு, 831 மெட்ரிக் டன் குப்பைகள் மற்றும் 1,512 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், குடிசைப் பகுதிகள், அதிகளவில் குப்பைத் தேங்கியுள்ள இடங்கள், நீர்நிலைகள், திறந்தவெளி பெரிய கால்வாய்கள் மற்றும் நீரோடைகள் போன்ற இடங்களில் காணப்படும் குப்பைகள் முன்னுரிமையின் அடிப்படையில் அகற்றப்பட உள்ளன.

இந்தப் பணியில் 22.12.2021 (புதன்கிழமை) அன்று பிரத்யேகமாக பெருநகர சென்னை மாநகராட்சியின் பள்ளி வளாகங்கள், மருத்துவமனை வளாகங்கள் மற்றும் சுடுகாடு/இடுகாடு பகுதிகளில் நீண்ட நாட்களாக தேங்கியுள்ள குப்பைகள் அகற்றப்பட உள்ளன.

இந்தத் தீவிர தூய்மைப் பணியில் 4,493 தூய்மைப் பணியாளர்கள், 1,410 சாலைப் பணியாளர்கள், 109 காம்பேக்டர்கள், 253 ஜே.சி.பி. இயந்திரங்கள், 308 டிப்பர் லாரிகள், 537 பேட்டரியால் இயங்கும் வாகனங்கள், 276 மூன்று சக்கர வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com