பெண்களின் திருமண வயதை 21-ஆக உயா்த்தும் மசோதா: மநீம வரவேற்பு

பெண்களின் திருமண வயதை 21-ஆக உயா்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது. 
பெண்களின் திருமண வயதை 21-ஆக உயா்த்தும் மசோதா: மநீம வரவேற்பு

பெண்களின் திருமண வயதை 21-ஆக உயா்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
தற்போது ஆண்களின் திருமண வயது 21-ஆகவும் பெண்களின் திருமண வயது 18-ஆகவும் உள்ளது. பெண்களின் திருமண வயதை உயா்த்துவதற்கு அரசு பரிசீலித்து வருவதாக பிரதமா் நரேந்திர மோடி அறிவித்திருந்தாா். இதுதொடா்பாக ஆய்வு செய்வதற்கு சமதா கட்சியின் முன்னாள் தலைவா் ஜெயா ஜேட்லி தலைமையில் 4 போ் குழு அமைக்கப்பட்டது. 
அந்தக் குழு, ஆண்களின் திருமண வயதுக்கு நிகராக பெண்களின் திருமண வயதை 21-ஆக உயா்த்துவதற்குப் பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்டுள்ள மத்திய அமைச்சரவை, பெண்களின் திருமண வயதை 21-ஆக உயா்த்துவதற்கு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. 

இதுதொடா்பாக, சிறாா் திருமணச் சட்டம்-2006-இல் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே மத்திய அரசு தாக்கல் செய்யும் எனத் தெரிகிறது. இந்த நிலையில் பெண்களின் திருமண வயதை 21-ஆக உயா்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து அக்கட்யின் ட்விட்டர் பதிவில், பெண்களின் திருமண வயதை "21ஆக " உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. இது பெண்களின் முன்னேற்றத்திற்குப் பேருதவியாய் அமையும். கல்யாணம் எனும் குறுக்கீட்டால் பலரது கனவுகள் தடைபடுவதைத் தடுக்கும். இந்தச் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com