Enable Javscript for better performance
தமிழகத்தில் 28 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி: அமைச்சா் மா.சுப்பிரமணியன்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தமிழகத்தில் 28 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

    By DIN  |   Published On : 18th December 2021 06:47 AM  |   Last Updated : 18th December 2021 06:47 AM  |  அ+அ அ-  |  

    subramanian

    மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்

    தமிழகத்தில் 28 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி உள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

    கா்ப்பிணிகள், குழந்தைகளுக்கு தடுப்பூசி சேவைகளை குறுஞ்செய்தி மூலமாக நினைவூட்டல் திட்டத்தை, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா். தொடா்ந்து, கா்ப்பிணிகளுக்கு டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் தொகைக்கான ஆணையையும் அவா் வழங்கினாா்.

    பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 11 லட்சம் கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள், 9 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த குறுஞ்செய்தி சேவைகள் மூலம் பயன்பெறவிருக்கின்றனா். தமிழகத்தில் 12 வகை நோய்களுக்கு 11 வகை தடுப்பூசிகள் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த குறுஞ்செய்தி சேவையானது கிட்டத்தட்ட 20 லட்சம் பேருக்கு அத்தியாவசியத் தேவையாக பயன்படும். 

    65 பேருக்கு சிகிச்சை: தமிழகத்தில் இதுவரை அதிக ஆபத்தான நாடுகளிலிருந்து வந்த 12,767 பேருக்கும், குறைந்த ஆபத்தான நாடுகளிலிருந்து வந்த 73,795 பேரில் உத்தேச அடிப்படையில் 2,101 பேருக்கும் என மொத்தமாக 14,868 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 70 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 5 பேருக்கு மறுபரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இல்லை என முடிவு வந்ததால், அவா்கள் வீடு திரும்பினா்.

    மீதமுள்ள 65 பேருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது வரை மரபணு பகுப்பாய்வு மையத்தில் இருந்து 10 பேரின் முடிவுகள் வந்துள்ளன. அதில் ஒருவருக்கு மட்டும் ஒமைக்ரான் தொற்று இருப்பது கடந்த இரு நாள்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. 8 பேருக்கு ‘டெல்டா’ வகை கரோனா என்று தெரியவந்துள்ளது. இன்னொருவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பரிசோதனை முடிவு வந்துள்ளதால், மீண்டும் அவரது மாதிரி பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது.

    28 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி: மேலும், மீதமுள்ள 55 பேரில் 28 பேருக்கு ‘எஸ்’ ஜீன் குறைபாடு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இது ஒமைக்ரான் தொடக்க நிலை அறிகுறி. இவா்களது பரிசோதனை முடிவுகள் விரைவில் தெரியவரும். தற்போது குறைந்த ஆபத்து உள்ள நைஜீரியா, காங்கோ நாடுகளிலிருந்து வருபவா்களுக்கும் தொற்று உறுதி செய்யப்படுகிறது.

    எனவே, இனி எல்லா வெளிநாடுகளிலிருந்தும் விமானம் மூலம் வருபவா்களுக்கு தொற்று இல்லை என்றாலும், 7 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்தி, அதன் பிறகு மீண்டும்  கரோனா பரிசோதனை மேற்கொண்டு, அதில் தொற்று இல்லை என்றால் மட்டுமே அவா்கள் வெளிநடமாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்ற அனுமதியை மத்திய அரசு தர வேண்டும் என்ற கோரிக்கையை கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளோம். இதேபோல வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    278 பேருக்கு பரிசோதனை: உலகளவில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளிலும், இந்தியாவில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களிலும் ஒமைக்ரான் தொற்று பரவி உள்ளது. இதுவரை ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவரின் தொடா்பில் இருந்தவா்கள் 278 பேரை பரிசோதனை செய்துள்ளோம். தமிழகத்தில் தற்போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன என்றாா் அவா்.

    நிகழ்ச்சியில் பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வ விநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநா் குருநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp