சென்னை: பேட்டரியால் இயங்கும் 3 சக்கர வண்டிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்டத்தைச், சேர்ந்த  கால்கள் 80 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், பேட்டரியால் இயங்கும் 3 சக்கர வண்டிக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 

சென்னை மாவட்டத்தைச், சேர்ந்த  80 விழுக்காட்டுக்கு மேல் பாதிக்கப்பட்ட கால்கள் பாதிக்கப்பட்ட கைகள் லேசாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின், ஏடிஐபி திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் விருப்ப நிதியிலிருந்து, பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வண்டி  வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

எனவே, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 80 விழுக்காட்டுக்கு மேல் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின், பெட்ரோல் ஸ்கூட்டர் பெற தகுதி இல்லாத கைகள் லேசாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மட்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவச் சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், யூ.டி.ஐ.டி  அட்டை நகல், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், டி.எம்.எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை அவர்களுக்கு  27.12.2021க்குள் விண்ணப்பிக்குமாறு,  சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர். ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com