விழுப்புரத்தில் 'இன்னுயிர் காப்போம்' 48 திட்டம்: முதல்வர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

'இன்னுயிர் காப்போம்' நம்மைக்காக்கும் 48 திட்டத்தை, மேல்மருவத்தூரில் இருந்து, காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
விழுப்புரத்தில் 'இன்னுயிர் காப்போம்' 48 திட்டத்தை முதல்வர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
விழுப்புரத்தில் 'இன்னுயிர் காப்போம்' 48 திட்டத்தை முதல்வர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 'இன்னுயிர் காப்போம்' நம்மைக்காக்கும் 48 திட்டத்தை, மேல்மருவத்தூரில் இருந்து, காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் மோகன், திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் புகழேந்தி, சிவக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் குந்தவிதேவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com