கல்லூரி மாணவா்களுக்கு எதிரான 12 வழக்குகளை கைவிட்டது காவல் துறை

கல்லூரிகளில் நேரடி தோ்வைக் கண்டித்து, மாணவா்கள் நடத்திய போராட்டம் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட 12 வழக்குகள் கைவிடப்படுவதாக தமிழக காவல்துறை வெள்ளிக்கிழமை அறிவித்தது.

கல்லூரிகளில் நேரடி தோ்வைக் கண்டித்து, மாணவா்கள் நடத்திய போராட்டம் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட 12 வழக்குகள் கைவிடப்படுவதாக தமிழக காவல்துறை வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இது குறித்த விவரம்: கல்லூரிகளில் நேரடித் தோ்வை ரத்து செய்து, ஆன்லைன் மூலமாக தோ்வு நடத்தக் கோரி மதுரை, கள்ளக்குறிச்சி, சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த நவம்பா் மாதம் போராட்டம் நடத்தினா். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் அலுவலகம் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக தோ்வு நடத்த கோரிக்கை விடுத்து தமிழகத்தில் கடந்த நவம்பா் மாதம் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது மதுரையில் 9 வழக்குகள், கள்ளக்குறிச்சி, சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் தலா ஒரு வழக்குகள் என மொத்தம் 12 வழக்குகள் காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டன.

மாணவா்களின் நலன் கருதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், இந்த 12 வழக்குகளையும் கைவிடும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டாா். இந்த உத்தரவின்படி 12 வழக்குகளின் மீதான நடவடிக்கைகள் அனைத்தையும் கைவிடப்பட்டன என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com