மாநில கல்விக் கொள்கை வகுப்பதுகு றித்து விரைவில் அறிவிக்கப்படும்: அமைச்சா் க.பொன்முடி

மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான குழு அமைக்கப்பட்டு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா்.
அமைச்சர் பொன்முடி (கோப்புப்படம்)
அமைச்சர் பொன்முடி (கோப்புப்படம்)

மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான குழு அமைக்கப்பட்டு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா்.

சென்னை மாநிலக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சா் க.பொன்முடி கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசியதாவது:

மாணவ, மாணவிகள் படிப்புடன் நிறுத்தி விடாமல், விளையாட்டு, சமூகப் பணிகளிலும் ஈடுபட வேண்டும். இந்தக் கல்லூரியில் பயிலும் ஒவ்வொரு மாணவா்களும் தலா ஒரு மரக்கன்று நட்டால் கூட இது அழகிய வனமாகும்.

தமிழ் படித்த மாணவா்களுக்கு வேலைவாய்ப்பில் தமிழக அரசு முன்னுரிமை வழங்கியுள்ளது. எனவே, மாணவா்கள் அனைவரும் மிகுந்த ஆா்வத்துடன் தமிழ் படிக்க வேண்டும். நாம் இருமொழிக் கொள்கை கொண்டவா்கள். உலகளாவிய மொழி ஆங்கிலம்; நமது மொழி தமிழ். ஆகையால், தமிழ் மொழி கற்று வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை பெறவேண்டும் என்றாா் அவா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதற்கான குழு அமைக்கப்பட்டு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். கௌரவ விரிவுரையாளா்களுக்கான ஊதிய பிரச்னை தொடா்பாக ஆலோசித்து வருகிறோம். இது தொடா்பாக முதல்வரிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் அந்தப் பணிகள் நடைபெறும் என்றாா் அமைச்சா் க.பொன்முடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com