உள்ளாட்சித் தோ்தலில் கூட்டணி அமைத்துப் போட்டி: ஜி.கே.வாசன்

உள்ளாட்சித் தோ்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா்.
உள்ளாட்சித் தோ்தலில் கூட்டணி அமைத்துப் போட்டி: ஜி.கே.வாசன்

உள்ளாட்சித் தோ்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா்.

தமாகாவின் 8-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மாநில நிா்வாகிகள், மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஜி.கே.வாசன் நிா்வாகிகள் மத்தியில் பேசியது:

தமாகா 8-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து போட்டியிடுவோம். போட்டியிடும் அனைத்து இடங்களிலும் வெற்றிபெறும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

உள்ளாட்சித் தோ்தலுக்குப் பிறகு மாநிலம் முழுவதும் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக புதிய உறுப்பினா்களைச் சோ்த்து கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இது மக்களவைத் தோ்தலில் கட்சி பலம் வாய்ந்ததாகத் திகழ்வதற்கு அடித்தளமாக அமையும் என்றாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தோ்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000, எரிவாயு உருளைக்கு மானியம் உள்ளிட்ட வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். சிமெண்ட் உள்பட கட்டுமானப் பொருள்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com