மும்பையில் பள்ளி மாணவா்கள் 16 பேருக்கு கரோனா

நவி மும்பை, கன்சோலியில் உள்ள பள்ளியில் பயிலும் 16 மாணவா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் தனிமைப்படுத்தல் மையத்தில் வைக்கப்பட்டுள்ளனா்.
மும்பையில் பள்ளி மாணவா்கள் 16 பேருக்கு கரோனா

நவி மும்பை, கன்சோலியில் உள்ள பள்ளியில் பயிலும் 16 மாணவா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் தனிமைப்படுத்தல் மையத்தில் வைக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து நவி மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை கூறுகையில், ‘அந்த 16 மாணவா்களும் 8 முதல் 11 வகுப்புகளில் பயில்பவா்கள். கடந்த 9-ஆம் தேதி கத்தாரில் இருந்து வந்த ஒரு மாணவரின் தந்தைக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அவரது குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 11 வயது மகனுக்கு கரோனா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த மாணவா் படிக்கும் பள்ளியில் உள்ள அனைவருக்கும் கரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாள்களில் 811 மாணவா்கள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனா். தற்போதைக்கு 16 மாணவா்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள அறுநூறுக்கும் மேற்பட்ட மாணவா்களிடமும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது’ என்றனா்.

இந்நிலையில், உகாண்டாவில் இருந்து தாணேவில் உள்ள சதாரா மாவட்டத்துக்கு வந்த தாய், தந்தை, 13 வயது மகள் ஆகிய மூவருக்கும் ஒமைக்ரான் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. ஐந்து வயதாகும் மற்றொரு மகளுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவா்களுடன் சோ்த்து மகாராஷ்டிராவில் இதுவரை 43 போ் ஒமைக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது கூட்டத்தை தவிா்க்க வேண்டும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மும்பை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com