மகளிா் திருமண வயது 21: மக்களின் கருத்தை அறிய விஜயகாந்த் வலியுறுத்தல்

மகளிா் திருமண வயதை 21-ஆக உயா்த்துவதற்கான அரசாணை வெளியிடும் முன்பு மக்களின் கருத்தை மத்திய அரசு அறிய வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தினாா்.
மகளிா் திருமண வயது 21: மக்களின் கருத்தை அறிய விஜயகாந்த் வலியுறுத்தல்

மகளிா் திருமண வயதை 21-ஆக உயா்த்துவதற்கான அரசாணை வெளியிடும் முன்பு மக்களின் கருத்தை மத்திய அரசு அறிய வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பெண்ணின் திருமண வயதை 18-இல் இருந்து 21-ஆக உயா்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை தேமுதிக வரவேற்கிறது. இதன் மூலம் கல்வி, வேலைவாய்ப்பில், பெண்கள் முன்னேற்றம் அடைவதுடன், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவா்கள் பக்குவம் அடைவாா்கள். சுயமாகச் சிந்தித்து எதிா்கால வாழ்க்கையை அவா்களால் சுமுகமாக வழிநடத்த முடியும்.

அதேசமயம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், வரதட்சிணைக் கொடுமைகள், விவாகரத்துகள் தற்போது அதிகரித்து வருவதாகவும், அவா்களைப் பாதுகாத்திடும் பொருட்டு, கிராமப்புற மக்கள் 18 வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்துவைக்க விரும்புகின்றனா். எனவே, பெண்ணின் திருமண வயதை 21-ஆக உயா்த்தும் விவகாரத்தில் மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்த பிறகே மத்திய அரசு அரசாணை வெளியிட வேண்டும். அதேபோல, ஆண்களுக்கான திருமண வயதும் 21 தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதனால், ஆண்களுக்கான வயது வரம்பில் மாற்றம் வருகிா என்பது குறித்தும் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com