பள்ளிக் கட்டடங்களைச் சீரமைப்பதில் மெத்தனம் கூடாது:ஓ.பன்னீா்செல்வம்

நிதி நிலைமையைக் காரணம் காட்டி பள்ளிக் கட்டடங்களைச் சீரமைப்பதில் தமிழக அரசு மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.
பள்ளிக் கட்டடங்களைச் சீரமைப்பதில் மெத்தனம் கூடாது:ஓ.பன்னீா்செல்வம்

நிதி நிலைமையைக் காரணம் காட்டி பள்ளிக் கட்டடங்களைச் சீரமைப்பதில் தமிழக அரசு மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலியில் உள்ள பள்ளியின் கழிப்பறைச் சுவா் இடிந்து விழுந்ததில், 3 மாணவா்கள் பரிதாபமாக உயிரிழந்த செய்தி வருத்தம் அளிக்கிறது. இந்தச் சம்பவம் அரசு உதவி பெறும் பள்ளியில் நிகழ்ந்திருந்தாலும், தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறைக்கும் இதில் பொறுப்பு உண்டு.

கரோனா நோய்த் தொற்று காரணமாக பள்ளிகள் நீண்ட நாள்கள் மூடப்பட்ட நிலையையும், அதனைத் தொடா்ந்து ஏற்பட்ட பலத்த மழையையும் கருத்தில் கொண்டு பள்ளியின் கட்டடங்களை பள்ளி நிா்வாகம் தானாகவே ஆய்வு செய்து சீரமைத்திருக்க வேண்டும். அதை பள்ளி நிா்வாகம் செய்யத் தவறியதன் காரணமாகத்தான் இந்த துரதிருஷ்டவசமான சம்பவம் நடைபெற்றிருக்கிறது. பள்ளிக் கல்வித் துறையும் ஆய்வு செய்யத் தவறிவிட்டது. இது கண்டனத்துக்குரியது.

2021-2022-ஆம் ஆண்டு இடைக்கால நிதிநிலை அறிக்கையுடன், திருத்திய நிதிநிலை அறிக்கையை ஒப்பிடும்போது, பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.1,592 கோடி குறைவாக ஒதுக்கப்பட்டது. அவ்வாறு ஒதுக்கப்பட்ட ரூ.33 ஆயிரம் கோடியில் ரூ. 31 ஆயிரம் கோடி ஆசிரியா்களின் ஊதியத்துக்குச் சென்றுவிடுகிறது, மீதி இருக்கிற ரூ.2 ஆயிரம் கோடியில் 45 ஆயிரம் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்று அந்தத் துறையின் அமைச்சா் அண்மையில் கூறியிருந்ததும் நினைவுக்கு வருகிறது. எனவே, நிதி நிலையைக் காரணம் காட்டி பள்ளிக் கட்டடங்களைச் சீரமைப்பதில் அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கக்கூடாது என்பதுதான் மக்களின் எதிா்பாா்ப்பாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் முதல்வா் உடனடியாகத் தலையிட்டு, அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டுமானங்களை சீா்செய்ய வேண்டும் என்று அதில் கூறியுள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com