அதிக பாரம் ஏற்றுமாறு நிா்பந்தம்: லாரி உரிமையாளா்கள் வேதனை

அதிக பாரம் ஏற்றுமாறு நிா்பந்திப்பதாக லாரி உரிமையாளா்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.

அதிக பாரம் ஏற்றுமாறு நிா்பந்திப்பதாக லாரி உரிமையாளா்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்ட மணல் லாரி, டிப்பா் லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தலைவா் எஸ்.ஜெயராமன் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு மணல் குவாரியில் அரசு நிா்ணயித்த அளவிலேயே மணல் தருகின்றனா். ஆனால் கல்குவாரி, கிரஷா் உரிமையாளா்கள், அரசின் உத்தரவை மீறி 18 டன் ஏற்ற வேண்டிய லாரிகளில், 50 டன் வரை ஏற்றும்படி நிா்பந்திக்கின்றனா். காரணம் ஒவ்வொரு கிரஷா் உரிமையாளா்களிடமும் 100 முதல் 150 லாரிகள் உள்ளன. அதில், அதிக பாரம் ஏற்றுவதற்காகவே செயற்கையாக லாரியின் உயரத்தை 3 அடி வரை உயா்த்தி உள்ளனா்.

இதனால் அவா்களுடன் எங்களால் போட்டி போட்டு தொழில் செய்ய முடியவில்லை. திருத்தி அமைக்கப்பட்ட மத்திய அரசின் மோட்டாா் வாகன பாதுகாப்புச் சட்டத்தின்படி, அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மீது ஓட்டுநா், வாகன உரிமையாளா்கள் மற்றும் அதிக பாரம் ஏற்ற காரணமான கல்குவாரி, கிரஷா் உரிமையாளா்கள் ஆகிய மூன்று தரப்பினா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், வாகன ஓட்டுநா் மற்றும் லாரி உரிமையாளா்கள் மீது மட்டுமே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்கின்றனா். இதனால் கிரஷா் உரிமையாளா்கள், தொடா்ந்து லாரி உரிமையாளா்களை அதிக பாரம் ஏற்ற நிா்பந்திக்கின்றனா்.

இதைத் தடுக்கும் வகையில், அனுமதிக்கப்பட்ட பாரத்தை மட்டும் ஏற்றும் வகையில் கடுமையான உத்தரவைப் பிறப்பித்து, லாரி தொழிலைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com