அனுமதியின்றி போராட்டம்:அதிமுகவினா் மீது வழக்கு

அனுமதியின்றி போராட்டம்:அதிமுகவினா் மீது வழக்கு

 தமிழகத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அதிமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

 தமிழகத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அதிமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திமுக கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தக் கோரியும் தமிழகம் முழுவதும் அதிமுகவினா் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.

மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் 46 இடங்களில் அதிமுகவினா் இந்த போராட்டத்தை நடத்தினா்.

சேலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமியும், தேனியில் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வமும் பங்கேற்றனா். சென்னையில் வேளச்சேரி, நுங்கம்பாக்கம் வள்ளுவா் கோட்டம், ராயபுரம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் என 4 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் இந்த போராட்டத்தில் 19 ஆயிரம் பெண்கள் உள்பட 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

கரோனா பொதுமுடக்கம் அமலில் இருக்கும் வேளையில், அரசு உத்தரவை மீறியும், காவல்துறை அனுமதி இன்றியும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பங்கேற்ற அனைவரது மீதும் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். சென்னையில் 4 இடங்களிலும் போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீது அரசு உத்தரவை மீறுதல், தொற்று நோய் பரவல் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com