குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் அரசின் எந்த விதிமுறைகளையும் பின்பற்றப்படாமல் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் மீண்டும் கரோனா பரவும் அபாயம் உள்ளது.
அரசின் எந்த  விதி முறைகளையும் பின்பற்றாமல் குற்றாலம் பேரருவியில் குளித்த சுற்றுலாப்பயணிகள்.
அரசின் எந்த  விதி முறைகளையும் பின்பற்றாமல் குற்றாலம் பேரருவியில் குளித்த சுற்றுலாப்பயணிகள்.

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் அரசின் எந்த விதிமுறைகளையும் பின்பற்றப்படாமல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் மீண்டும் கரோனாபரவும் அபாயம் உள்ளது.

கரோனா பரவல் முதல் அலை காரணமாக கடந்த 23-3-2020 அன்று குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. முதல் அலையின் தாக்கம் வெகுவாக குறைந்ததையடுத்து 15-12-20 முதல் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில் கரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக மீண்டும் கடந்த 16-4-21முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் தொற்று வெகுவாக குறைந்து தளா்வுகள் அறிவிக்கப்பட்டும் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடா்ந்தது.

இந்நிலையில் டிச.20 முதல் பொதுமக்கள் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதியளித்து  மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் உத்தரவிட்டாா்.

திங்கள்கிழமை அதிகாலையில் குற்றாலம் பேரருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பழனிநாடாா், மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு அருவி நீரில் மலா்களைத் தூவி வழிபட்டனா்.

அதனைத் தொடா்ந்து சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். குற்றாலம் அருவிகளில் சோப் போட்டு குளித்தும், சமூக இடைவெளிகளைப் பின்பற்றாமல் கூட்டமாக நின்றும், அருவிகளில் திட்டமிட்டபடி சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்காமல் மொத்தமாக குளிக்க அனுமதித்தது, வெப்பமானி  கொண்டு  உடல்பரிசோதனை மேற்கொள்ளாமலும், வரிசையில் நிற்காமலும் சுற்றுலாப்பயணிகளை குளிக்க அனுமதித்தனா்.

அரசின் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் கூட்டமாக சென்றும், எந்த வித சோதனைகளுமின்றி அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். இதனால் மேலும் கரோனா நோய்த்தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுலாப்பயணிகள் வருத்தம் தெரிவித்தனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com