மதுரையில் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் கதவடைப்புப் போராட்டம் 

மூலப்பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கோரி மதுரை மாவட்டத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கதவடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
மதுரையில் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் கதவடைப்புப் போராட்டம் 

மதுரை: மூலப்பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கோரி மதுரை மாவட்டத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கதவடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான இரும்பு, தாமிரம், அலுமினியம், பேக்கிங் காகிதம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஏற்கனவே கரோனா பொதுமுடக்கத்தால் தொழில் பாதிப்பை சந்தித்து வரும் நிறுவனங்கள், இந்த விலையேற்றம் காரணமாக நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இதனையடுத்து மூலப் பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி அகில இந்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு, நாடு தழுவிய அளவில் ஒருநாள் கதவடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. 

இதன்படி. மதுரை மாவட்டத்தில் இப்போராட்டத்தில் அனைத்து தொழில் அமைப்புகளும் பங்கேற்றுள்ளன. 

மதுரை மாவட்ட சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் சங்கம், கப்பலூர் தொழில் அதிபர்கள் சங்கம்,  கே புதூர் சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், செல்லூர் கைத்தறி நெசவாளர்கள் சங்கம், மதுரை சுங்குடி உற்பத்தியாளர்கள் சங்கம், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம், பிஸ்கட் மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்கம், நகரி தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கம் , கட்டுமான பொறியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு தொழில் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அனைத்து தொழில் அமைப்புகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com