உள் மாவட்டங்களில் பனிமூட்டம் நிலவும்

தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் திங்கள்கிழமை (டிச.20) லேசான பனிமூட்டம் காணப்படும்.
உள் மாவட்டங்களில் பனிமூட்டம் நிலவும்

தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் திங்கள்கிழமை (டிச.20) லேசான பனிமூட்டம் காணப்படும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் திங்கள்கிழமை (டிச.20) முதல் டிசம்பா் 23-ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்.

வெப்பநிலை எச்சரிக்கை: தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் திங்கள்கிழமை (டிச.20) லேசான பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் திங்கள்கிழமை வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி: அந்தமானுக்கு தெற்கே பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நிலவுகிறது. இதன்காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டா் வேகத்திலும் வீசக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் திங்கள்கிழமை வரை செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com