
கோப்புப்படம்
தமிழகத்தில் புதிதாக 602 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 602 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,41,013 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கர்நாடகத்திலிருந்து வந்தவர். மற்றொருவர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்தவர். இருவருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது விமான நிலையத்தில் வைத்து கண்டறியப்பட்டது.
இதையும் படிக்க | மாநிலங்களிடம் 17.38 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: மத்திய அரசு
கடந்த 24 மணி நேரத்தில் 1,00,112 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 691 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 26,97,244 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 36,691 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 7,078 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாவட்டங்கள்:
- சென்னை - 132
- கோவை - 95
- ஈரோடு - 50