
மு.க.ஸ்டாலின்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
சென்னை தேனாம்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள சண்முகநாதனின் உடலுக்கு முதல்வருடன் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினரும் அஞ்சலி செலுத்தினர்.
படிக்க | கருணாநிதியின் உதவியாளர் கோ.சண்முகநாதன் காலமானார்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் சண்முகநாதனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். இதற்கு முன்பு அவரது உடலுக்கு நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சண்முகநாதன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.