சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம்

கூலி உயர்வு கேட்டு சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம்

கூலி உயர்வு கேட்டு சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சங்கரன்கோவில், ராஜபாளையம், புளியங்குடி ஆகிய பகுதிகளில் விசைத்தறி நெசவுத் தொழில் பிரதானத் தொழிலாக உள்ளது. சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இங்கு 25,000-க்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 

கரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகள் விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இறுதியாக ஒவ்வொரு ஆண்டும் 10% கூலி உயர்வு வழங்க, வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை, தொழிற்சங்கங்கள் என முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சில மாதங்களுக்கு முன்பாக முடிவு எடுக்கப்பட்டது. எனினும், 10% கூலி உயர்வை உரிமையாளர்கள் அமல்படுத்தவில்லை. 

இதையடுத்து, பல்வேறு கட்ட போராட்டத்தை முன்னெடுத்து வரும் விசைத்தறி தொழிலாளர்கள், போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 20 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சங்கரன்கோவில் -ராஜபாளையம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் கைவிடப்படாத நிலையில், மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவர்களை காவல்துறையினர் கைது செய்து மண்டபங்களில் அடைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com