Enable Javscript for better performance
இசை கற்போர் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    இசை கற்போர் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    By DIN  |   Published On : 24th December 2021 03:36 PM  |   Last Updated : 24th December 2021 03:36 PM  |  அ+அ அ-  |  

    mks


    சென்னை: திருக்கோயில் தவில், நாதஸ்வர பயிற்சி பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், உயர்த்தப்பட்ட உதவித்தொகையான ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.

    தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

    முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர், ஓதுவார், பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர் மற்றும் இசை கற்போர் (தவில், நாதஸ்வரம்) ஆகிய பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1000 ஊக்கத் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கும் திட்டத்தை, 18 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி, முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையின் 20210-22 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், அர்ச்சகர், ஓதுவார், பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர் மற்றும் இசை கற்போர் (தவில், நாதஸ்வரம்) ஆகியோருக்கு பயிற்சிக் காலத்தில் ஏற்கனவே ரூ. 1,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, அந்த ஊக்கத்தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதையும் படிக்க |  சுகம் தரும் சித்த மருத்துவம்: கொலஸ்ட்ரால் கவலையை குறைக்குமா? - ‘கரிசலாங்கண்ணி கீரை’

    அதன்படி, பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மற்றும் மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் வேதபாராயணர் பள்ளிகளில் பயின்று வரும் 18 மாணவர்கள், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயின்று வரும் 24 மாணவர்கள் மற்றும் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தவில், நாதஸ்வர பயிற்சி பள்ளிகளில் பயின்று வரும் 25 மாணவர்கள், என மொத்தம் 67 மாணவர்கள் பயன்பெறும் வகையில், உயர்த்தப்பட்ட உதவித்தொகையான ரூ. 3 ஆயிரத்தை 18 மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    இதையும் படிக்க | ரூ.40,000 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை: விண்ணப்பிக்கலாம் வாங்க! 


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp