
கோப்புப்படம்
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (டிச.26) 50,000 இடங்களில் 16-ஆவது கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் இதுவரை 88 சதவீதத்தினா் முதல் தவணை தடுப்பூசியும், 50 சதவீதத்தினா் இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனா்.
இந்நிலையில், 16-ஆவது கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் நடைபெறும் முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
வழக்கமாக சனிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டுக்காக இந்த வாரமும், அடுத்த வாரமும் ஞாயிற்றுக்கிழமை முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.