புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: முதல்வர், உள்துறை அமைச்சர் பங்கேற்பு

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் விழா சனிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை மாலை முதல் தேவாலயங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பிரார்த்தனைகள் தொடங்கினர்.
புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்


புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் விழா சனிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை மாலை முதல் தேவாலயங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பிரார்த்தனைகள் தொடங்கினர்.

நள்ளிரவு 12 மணி முதல் தேவாலயங்களில் திரண்ட கிறிஸ்தவ மக்கள் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து அதிகாலை இயேசு கிறித்து குழந்தையாக பிறந்த நிகழ்வுகள், குடில்கள் அமைத்து சிறப்பு பிரார்த்தனையுடன் நடைபெற்றன. புத்தாடை அணிந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர். இனிப்புகள் மற்றும் கேக்வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

முதல்வர் என். ரங்கசாமி, புதுச்சேரி கிறிஸ்துவ தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொண்டு வழிபட்டார். அப்போது விழாவில் பங்கேற்ற கிறிஸ்தவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், மிஷன் வீதி புனித ஜென்மராக்கினி பேராலயம் மற்றும் ரயில் நிலையம் அருகே உள்ள பசிலிக்கா பேராலயம் ஆகிய பிரசித்தி பெற்ற மாதா கோவில்களில் கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றன.

இந்த பேராலயங்களில் மாநில உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம், எம்எல்ஏக்கள் ஜான்குமார், ரிச்சர்ட்  ஆகியோர் கிறிஸ்மஸ் திருவிழா வழிபாட்டில் பங்கேற்றனர். 

அப்போது உள்துறை அமைச்சர் நமசிவாயம்,  கிறிஸ்துமஸ் விழா கொண்டாடும் கிறிஸ்தவ மக்கள், பாதிரியார்கள், எம்எல்ஏக்கள் ஜான்குமார், ரிச்சர்ட்  உள்ளிட்டோருக்கு சால்வை அணிவித்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com