ஸ்ரீவில்லிபுத்தூரில் சிஎஸ்ஐ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள சி.எஸ.ஐ.தேவாலயங்களில் சனிக்கிழமை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றன.
ஸ்ரீவில்லிபுத்தூரில் சிஎஸ்ஐ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
ஸ்ரீவில்லிபுத்தூரில் சிஎஸ்ஐ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

ஸ்ரீவில்லிபுத்தூர்: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள சி.எஸ.ஐ.தேவாலயங்களில் சனிக்கிழமை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றன.

இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று உலகமெங்கிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகத்துடனும், கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகுச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான (டிசம்பர் 25)ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாக வழக்கத்தைவிட எளிமையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு அரசின் செயல்பாடுகள் காரணமாக கரோனா கட்டுக்குள் இருப்பதால் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்துவதற்கு ஏராளமான தளர்வுகள் வழங்கப்பட்டிருப்பதால் வழக்கமான உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இந்த மாதத்தின் தொடக்கம் முதலே பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முகப்புகளில் நட்சத்திரங்களை தொங்கவிடம், கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் குடில்கள் அமைத்தும்  பண்டிகையை கொண்டாட தயாராகி வந்தனர்.

இன்று டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒடடி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படுகின்றன. தேவாலயங்களில் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் விழா சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அத்திகுளம் சிஎஸ்ஐ பரிசுத்த பவுல் தேவாலயத்தில் அதிகாலை 4 மணிக்கு சபை குருவானவர் அருள்தனராஜ் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தேவசெய்திக்கு பின்பு திருவிருந்து உபசரணை நடைபெற்றது. பிரார்த்தனை முடிவில் அனைவரும் ஒருவரை ஒருவர் கைகுலுக்கி கொண்டாடினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிஎஸ்ஐ தூய தோமா தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை பால் தினகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com