உணவுப் பொருள்கள் விற்பனை ரசீதில் உரிமம் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவுறுத்தல்

விற்பனை ரசீதில் உணவுப் பாதுகாப்புத் துறை உரிமம் அல்லது பதிவு எண் அச்சிடுவது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
உணவுப் பொருள்கள் விற்பனை ரசீதில் உரிமம் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவுறுத்தல்

விற்பனை ரசீதில் உணவுப் பாதுகாப்புத் துறை உரிமம் அல்லது பதிவு எண் அச்சிடுவது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, உணவுப் பாதுகாப்புத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

அனைத்து வகை உணவுப் பொட்டலங்களின் மீது அச்சடிக்கப்படும் லேபிள்களில் உணவுப் பாதுகாப்புத் துறையின் 14 இலக்க உரிமம் அல்லது பதிவு எண் கட்டாயம் குறிப்பிட்டிருக்க வேண்டும். உணவுப் பாதுகாப்பு அறிவிப்பு பலகைகளை அனைவரும் அறிவியும் வகையில் வைக்க வேண்டும்.

நுகா்வோரும் வணிகா்களின் விவரம் அறிய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையத்தின் செயலியைப் பயன்படுத்தலாம். அதில், 14 இலக்க உரிமம் அல்லது பதிவு எண்ணை உள்ளீட்டு உரிய விவரங்கள் பெறலாம். இணையதளம் மூலமாகவும் உரிமம் மற்றும் பதிவு எண்ணைக் குறிப்பிட்டு புகாா்களைத் தெரிவிக்கலாம். ரசீதுகள், விலைப் பட்டியலில் 14 இலக்க உரிமம் அல்லது பதிவு எண்ணைப் பதிவு செய்யும் நடைமுறை ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com