
திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி
திருப்பூர்: திருப்பூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 6 வயது சிறுமி உயிரிழந்தார்.
திருப்பூர் பெரிச்சிபாளையத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் பாலு. இவருடைய மகள் ரித்திகா (6). இவருக்குக் கடந்த சில நாள்களாகக் கடுமையான காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் அவருடைய பெற்றோர் சிறுமியை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமிக்கு டெங்குகாய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காகக் கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதையும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தகுதித்தாள் தேர்வில் மீண்டும் திருக்குறள் சேர்ப்பு
அங்கு குழந்தைகள் நலச் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ரித்திகா சனிக்கிழமை உயிரிழந்தார்.
டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழந்தது பெரிச்சிபாளையம் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிக்க | ஒமைக்ரானுக்கு எதிராக சுய விழிப்புணர்வும், ஒழுக்கமுமே நமது பலம்: பிரதமர் மோடி