Enable Javscript for better performance
எடப்பாடி பகுதியில் எருதாட்டத்திற்கு தயாராகி வரும் ஜல்லிக்கட்டு காளைகள்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    எடப்பாடி பகுதியில் எருதாட்டத்திற்கு தயாராகி வரும் ஜல்லிக்கட்டு காளைகள்

    By DIN  |   Published On : 26th December 2021 12:58 PM  |   Last Updated : 26th December 2021 12:58 PM  |  அ+அ அ-  |  

    எடப்பாடி பகுதியில் எருதாட்டத்திற்கு தயாராகி வரும் ஜல்லிக்கட்டு காளை

    எடப்பாடி பகுதியில் எருதாட்டத்திற்கு தயாராகி வரும் ஜல்லிக்கட்டு காளை


    எடப்பாடி: பொங்கல் விழா விரைவில் வர உள்ள நிலையில், சேலம் மாவட்டம், எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஜல்லிக்கட்டு காளைகளை, எருதாட்டம் நிகழ்ச்சிக்காக அதன் உரிமையாளர்கள் தயார் செய்து வருகின்றனர்.

    ஆண்டுதோறும் தைத்திருநாள் பொங்கல் விழாவில் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கோயில்களில் எருதாட்டம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 

    இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக கரோனா பாதிப்பால் எருதாட்டம் நிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருந்த நிலையில், நடப்பாண்டில் இப்பகுதியில் எருதாட்டம் நிகழ்ச்சி நடைபெற வாய்ப்பு உள்ளதாக கருதி, இப்பகுதி ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் அதற்காக தங்களை தயார் செய்து வருகின்றனர்.

    எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட வேம்பனேரி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யனாரப்பன் கோயிலில் நடைபெறும் எருதாட்டம் நிகழ்ச்சி, மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். 

    பொங்கல் பண்டிகையையொட்டி இவ்வாலய வளாகத்தில் நடைபெறும் எருதாட்ட நிகழ்ச்சியில்  சுமார் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கு பெறுவது வழக்கம். 

    இதையும் படிக்க | மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு

    இப்பகுதி விவசாயிகள்  உழவர் திருநாள் அன்று தாங்கள் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டு காளைகளை  அலங்கரித்து அய்யனாரப்பன் கோயில் நுழைவுவாயில் முன் நிறுத்தி சிறப்பு பூஜை செய்வர். தொடர்ந்து காளைகளுக்கு பழம், கரும்பு, வெல்லம், தேங்காய் உள்ளிட்டவற்றை உண்ண கொடுத்து அந்த காளைகள் களத்தில் சுவாமிக்கு படைக்கப்பட்ட மலர் மாலை அணிவிக்கப்படும். 

    பொங்கல் விழா விரைவில் வர உள்ள நிலையில், எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஜல்லிக்கட்டு காளைகளை, எருதாட்டம் நிகழ்ச்சிக்காக தயார் செய்து வரும் அதன் உரிமையாளர்கள்.

    தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைக்கு கோயில் பூசாரி சிறப்பு பூஜை செய்தபின் அதன் காலை தொட்டு வணங்கிய காளையின் உரிமையாளர் அதனை அங்கு உள்ள மைதானத்தில் அவிழ்த்து விடுவார். சீறிப்பாய்ந்து மைதானத்தில் ஓடி வரும் காளையை அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் விரட்டி பிடித்து கோயில் வாயில் முன் கொண்டுவந்து நிறுத்துவர். பாரம்பரிய நிகழ்வுகள் பல இளைஞர்கள் படுகாயம் அடைவதுடன் சில சமயங்களில்  உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் இவ்வாறு எருதுகளை அவிழ்த்துவிட்டு அவை கோயிலை வலம் வரும் வேளையில் அதனை பிடித்து வந்து தங்கள் நிலத்தில் கட்டுவதன் மூலம் அவ்வாண்டில் விவசாயம் செழிக்கும், மழைப்பொழிவு அதிகம் இருக்கும் என இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நம்பிக்கையாக அமைந்துள்ளது. 

    வேம்பனேரி அய்யனாரப்பன் கோயில் வளாகத்தில் நடைபெறும் எருதாட்டம் நிகழ்ச்சியை காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பார்வையாளர்கள் வருவது வழக்கம்.  

    இந்நிலையில், நிகழாண்டில் எருதாட்டம் நிகழ்ச்சிக்கு உரிய அனுமதியை மாவட்ட நிர்வாகம் இதுவரை வழங்காத நிலையிலும், தங்கள் பாரம்பரிய எருதாட்ட நிகழ்ச்சிக்கு விதிமுறைகளை பின்பற்றி அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அப்பகுதி இளைஞர்கள் தங்கள் ஜல்லிக்கட்டு காளைகளை தயார் செய்து வருகின்றனர்.

    இதையும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தகுதித்தாள் தேர்வில் மீண்டும் திருக்குறள் சேர்ப்பு


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp