கூத்தாநல்லூரில் கந்தூரி விழா

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் ஹஜ்ரத் ஷெய்குதாவூது வலியுல்லாஹ் ஹின் 5 ஆம் ஆண்டு கந்தூரி விழா நடைபெற்றது.
கூத்தாநல்லூரில் கந்தூரி விழா

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் ஹஜ்ரத் ஷெய்குதாவூது வலியுல்லாஹ் ஹின் 5 ஆம் ஆண்டு கந்தூரி விழா நடைபெற்றது.

கூத்தாநல்லூரில் ஹஜ்ரத் ஷெய்கு தாவூதிய்யா இஹ்வான்கள் நடத்தும், முத்துப்பேட்டை காரணக்கடல், ஹஜ்ரத் ஷெய்குதாவூது வலியுல்லாஹ் ஹின் 5 ஆம் ஆண்டு புகழ்பாடும் கந்தூரி விழா, ஆலிம் சாஹிப் அப்பா தைக்கால் மஸ்ஜித் வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு வட்டார ஜமாஅத்துல் உலமா சபை செயலாளரும் ஆலிம் சாஹிப் அம்பா தைக்கால் பள்ளி வாயில் இமாமுமான எம்.எஸ்.அஹமது மீரான் தலைமை வகித்தார். மன்பஉல் உலா சபைத் தலைவர் எல்.எம்.முஹம்மது அஷ்ரப் முன்னிலை வகித்தார்.

விழாவில், முத்துப்பேட்டை தர்கா ஷரீப் முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் மஹான் ஹக்கீம் ஷெய்கு தாவூது வலியுல்லாஹ் வின் வரலாற்றுச் சிறப்புகளை விவரித்து புகழ் பாடினார்.

தொடர்ந்து, சிறார்களின் தப்ஸ் இசையுடன் பாரம்பரிய முறையில் புகழ் பாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, உலக ஒற்றுமைக்காகவும், அமைதிக்காகவும், நாட்டின் நலனுக்காகவும், கரோனா, டெல்டா, ஒமைக்ரான் உள்ளிட்ட கொடிய நோய்கள் ஒழிய வேண்டும் என்பதற்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்டன.

நிகழ்ச்சியில், முத்துப்பேட்டை தர்கா ஷரீப் அறங்காவலர்கள் ஜீபைர் சாஹிப், பூதமங்கலம் ஜாமிஆ மஸ்ஜித் தலைமை இமாம் ஏ.அப்துல் காதிர் ஜெய்லானி, வி.கே.பீ.நூர் முஹம்மது லெப்பை, ஏ. தமீம் அன்சாரி சாஹிப், விழா குழு உறுப்பினர் எஸ்.எஸ்.ஹாஜா நஜ்முதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக, கே.அமீருதீன் ஜலாலி புகழ் கீதம் பாடினார். விழா ஏற்பாடுகளை, பி.எம்.முஹம்மது சுலைமான் மற்றும் விழாக் குழுவினர்கள் கவனித்தனர். நிறைவாக, அனைவருக்கும் சீரணி என்ற பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com