செல்ஃபியால் விபரீதம்: பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களை தேடும் பணி தீவிரம்

கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட பாலாற்றுக்கு வந்தவர்கள் செல்ஃபி எடுக்க முயன்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் உடல்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
செல்ஃபியால் விபரீதம்
செல்ஃபியால் விபரீதம்


சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட பாலாற்றுக்கு வந்தவர்கள் செல்ஃபி எடுக்க முயன்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் உடல்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையன்று காலை, பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்கள் இதுவரை கிடைக்காததால் குடும்பத்தில் கவலை அடைந்துள்ளனர்.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்கள், திரிசூலத்தில் மளிகைக் கடை நடத்தி வந்த லியோன்சிங் ராஜா (38), அவரது மகள் பெர்சி (16), சகோதரரின் மகன் லிவிங்ஸ்டன் (19) என்பது தெயிர வந்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையன்று, அச்சரப்பாக்கத்தில் உள்ள மலை மாதா தேவாலயத்துக்குச் சென்று விட்டுத் திரும்பிய 20 பேர் கொண்ட உறவினர்கள் குழு, பாலாற்றங்கரைக்கு வந்துள்ளது. ஆற்றின் அருகே செல்ல வேண்டாம் என்று அங்கிருந்தவர்கள் எச்சரித்தும், அதனைப் பொருட்படுத்தாமல், அருகே நின்று செல்ஃபி எடுக்க முயன்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

பாலாற்றில் அதிக அளவில் தண்ணீர் ஓடுவதால் உடல்களைத் தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. உடல்களை மீட்கும் பணியில், அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் நீச்சல் வீரர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com