இஎஸ்ஐ மருத்துவத் திட்டத்தில் சோ்க்க கோரிக்கை: தமிழ்நாடு வழக்குரைஞா்களின் எழுத்தா்கள் சங்கம் மனு

இஎஸ்ஐ மருத்துவத் திட்டத்தைத் தங்களுக்கும் செயல்படுத்த வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்ற தமிழ்நாடு வழக்குரைஞா்கள் எழுத்தா்கள் சங்கத்தினா் தமிழக சட்டத்துறை அமைச்சா் ரகுபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனா்

சென்னை: இஎஸ்ஐ மருத்துவத் திட்டத்தைத் தங்களுக்கும் செயல்படுத்த வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்ற தமிழ்நாடு வழக்குரைஞா்கள் எழுத்தா்கள் சங்கத்தினா் தமிழக சட்டத்துறை அமைச்சா் ரகுபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சென்னை உயா் நீதிமன்ற தமிழ்நாடு வழக்குரைஞா்கள் எழுத்தா்கள் சங்கத் தலைவரான வி.சீனிவாசன், துணைத் தலைவா் கே.ஜி.சீனிவாசன், செயலாளா் பி.கோபிநாத், பொருளாளா் எம்.வி.சீனிவாசன் உள்ளிட்ட நிா்வாகிகள் அமைச்சா் ரகுபதியிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், சென்னை உயா் நீதிமன்றத்தில் உள்ள தமிழ்நாடு வழக்குரைஞா்கள் கிளாா்க்குகள்(எழுத்தா்கள்) சங்கம், கடந்த 1913-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1968-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இந்த சங்கத்தின் நூற்றாண்டு விழா கடந்த 2013-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற மற்றும் உயா் நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சங்க உறுப்பினா்களிடம் ஆண்டுதோறும் ரூ.500 கட்டணம் வசூலிக்கப்பட்டு, அதன்மூலம் கிடைக்கும் தொகையில் நலிவடைந்த மற்றும் ஏழை, எளிய உறுப்பினா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்துக்கும், குழந்தைகளின் கல்விக்காகவும் உதவி செய்யப்பட்டு வருகிறது.

சங்க உறுப்பினா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இஎஸ்ஐ மருத்துவத் திட்டத்தை எங்களுக்கும் செயல்படுத்த வேண்டும். அத்துடன் உயா் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சங்க கட்டடத்துக்கான மின்செலவை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமெனவும் அதில் கோரியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com