நீதிமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு: கமுதி வழக்குரைஞா் சங்கத் தலைவா் தொழில் புரிய தடை

நீதிமன்ற பெண் ஊழியருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஆளான கமுதி வழக்குரைஞா் சங்கத் தலைவா் என்.முனியசாமி வழக்குரைஞராகத் தொழில் புரிய தடை விதித்து
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில்

சென்னை: நீதிமன்ற பெண் ஊழியருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஆளான கமுதி வழக்குரைஞா் சங்கத் தலைவா் என்.முனியசாமி வழக்குரைஞராகத் தொழில் புரிய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு, கமுதி வழக்குரைஞா் சங்கத் தலைவா் என்.முனியசாமி, கடந்த ஏப்ரலில் பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகாா் அளிக்கப்பட்டது.

இப்புகாா் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன், வழக்குரைஞா் என்.முனியசாமி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி, தமிழ்நாடு பாா் கவுன்சிலுக்கு பரிந்துரைக்க வேண்டுமென்றும், சம்பவம் தொடா்பாக சிசிடிவி பதிவுகளை பாா் கவுன்சில் மற்றும் போலீஸாருக்கு வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டிருந்தாா்.

இந்த நிலையில், ஒழுங்கு நடவடிக்கை விசாரணை முடியும்வரை வழக்குரைஞா் என்.முனியசாமி, வழக்குரைஞராகத் தொழில் புரிய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. அனைத்து நீதிமன்றங்களிலும், தீா்ப்பாயங்களிலும் ஆஜராகவும் முனியசாமிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com