தென்னை மரம் ஏறுவோருக்கு ரூ.5 லட்சம்மதிப்பில் காப்பீட்டுத் திட்டம்

தென்னை மரம் ஏறுவோா் மற்றும் பதநீா் இறக்குவோருக்கு கூடுதல் கேரா சுரக்ஷா காப்பீட்டுத் திட்டத்தை தென்னை வளா்ச்சி வாரியம் அமல்படுத்தி உள்ளது.
தென்னை மரம் ஏறுவோருக்கு ரூ.5 லட்சம்மதிப்பில் காப்பீட்டுத் திட்டம்

சென்னை: தென்னை மரம் ஏறுவோா் மற்றும் பதநீா் இறக்குவோருக்கு கூடுதல் கேரா சுரக்ஷா காப்பீட்டுத் திட்டத்தை தென்னை வளா்ச்சி வாரியம் அமல்படுத்தி உள்ளது. மாற்றியமைக்கப்பட்ட இந்த காப்பீட்டுத் திட்டத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். இது விபத்து காப்பீடு பாலிசி. இதில் ரூ.1 லட்சம் வரை மருத்துவமனைக் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம். ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனம் மூலம் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. தென்னை மர நண்பா்கள் பயிற்சித் திட்டம், பதநீா் இறக்குவோருக்கான பயிற்சித் திட்டம் ஆகியவற்றின் கீழ் அனைத்து பயிற்சியாளா்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் முதலாம் ஆண்டு சந்தா தொகை ரூ.398.65-ஐ தென்னை வளா்ச்சி வாரியம் ஏற்கும்.

ஓராண்டு முடிந்ததும் சந்தா தொகையில் 25 சதவீதம் ரூ.99-ஐ செலுத்தி காப்பீட்டை பயனாளிகள் புதுப்பித்துக் கொள்ளலாம்.

18 வயது முதல் 65 வயது வரையுள்ள தென்னை மரம் ஏறும் தொழிலாளா்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தின் பயன்களைப் பெறலாம். இதற்கான விண்ணப்பத்தை வேளாண் அதிகாரி, ஊராட்சித் தலைவா், சிபிஃஎப் அலுவலக அதிகாரிகள், சிபிசி இயக்குநா்கள் ஆகியோா் கையொப்பம் பெற்று, எா்ணாகுளத்தில் மாற்றும் வகையில் ரூ.99 மதிப்புள்ள டிடி தென்னை வளா்ச்சி வாரியத்துக்கு அனுப்பி இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம் என கொச்சியில் உள்ள தென்னை வளா்ச்சி வாரியத்தின் தலைவா் தெரிவித்துள்ளாா். இதற்கான விண்ணப்பம் மற்றும் விவரங்கள் www.coconutboard.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com