பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற கைரேகை கட்டாயமில்லை: உணவுத் துறை அமைச்சர்

பொங்கல் பரிசுப்பொருள்களைப் பெற கைரேகை கட்டாயமில்லை என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 
பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற கைரேகை கட்டாயமில்லை: உணவுத் துறை அமைச்சர்

பொங்கல் பரிசுப்பொருள்களைப் பெற கைரேகை கட்டாயமில்லை என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 

பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகததை அமைச்சர் சக்கரபாணி நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் பேசிய அவர், பொங்கல் பண்டிகைக்கான 21 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஜனவரி 3 அல்லது 4-ஆம் தேதி முதல் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். 

ஜன 2-ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுப் பொருள்கள் அந்தந்த நியாயவிலைக் கடைகளுக்கு சென்று சேர்ந்துவிடும் எனக் குறிப்பிட்ட அவர், 

பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற கைரேகை வைக்க வேண்டிய கட்டாயமில்லை. குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ரேஷன் அட்டையை காண்பித்தாலே போதுமானது என்று கூறினார். 

பொங்கல் மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை சிறப்பாக விநியோகித்திட எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து கடந்த 27-ஆம் தேதி கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com