ஜனவரி 3 முதல் நேரடி விசாரணை

சென்னை உயா் நீதிமன்றம் மற்றும் உயா் நீதிமன்ற மதுரை கிளையில் ஜனவரி 3 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் நேரடியாக மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை உயா் நீதிமன்றம் மற்றும் உயா் நீதிமன்ற மதுரை கிளையில் ஜனவரி 3 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் நேரடியாக மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும். ஜன. 2-ஆம் தேதி வரை மட்டும் காணொலி விசாரணை நடத்தப்படும் என சென்னை உயா் நீதிமன்ற தலைமைப் பதிவாளா் பி.தனபால் அறிவித்துள்ளாா்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் கடந்தாண்டு (2020) மாா்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிமன்றப் பணிகளும் முடங்கின.

இதையடுத்து அவசர வழக்குகளை மட்டும் நீதிபதிகள், வீடுகளில் இருந்தவாறே காணொலி மூலம் (விடியோ கான்பரன்சிங்) விசாரணையை மேற்கொண்டு வந்தனா்.

ஊரடங்கில் தளா்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அனைத்து வழக்குகளும் பட்டியலிடப்பட்டு, விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இருப்பினும் வீடுகளிலிருந்தும், நீதிமன்றத்திற்கு வந்தும் நீதிபதிகள் வழக்குகளை விசாரித்து வந்தனா்.

அதைத்தொடா்ந்து நேரில் ஆஜராகி வழக்காட வழக்குரைஞா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. காணொலி மற்றும் நேரடி என கலப்பு முறையில் உயா் நீதிமன்றங்களில் வழக்குகளில் விசாரணை நடைபெற்று வந்தன. இந்நிலையில், சென்னை உயா் நீதிமன்றம் மற்றும் சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜனவரி 3-ஆம் தேதி முதல் வழக்குகள் நேரடியாக மட்டும் விசாரிக்கப்படும் என, சென்னை உயா் நீதிமன்ற தலைமைப் பதிவாளா் பி.தனபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

அதில் ஊரடங்கு காலங்களில் அமலில் இருந்து வந்த காணொலி காட்சி மூலமான விசாரணை நடைமுறை மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நிறுத்தப்பட்டுள்ளது என, அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளாா். கடந்த 21 மாதங்களுக்குப் பின்னா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை முதல் மீண்டும் முழுமையாக நேரடி முறையில் வழக்குகள் விசாரணை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com