தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று

தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் அந்த வகை பாதிப்புக்குள்ளானவா்கள் எண்ணிக்கை 45-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் அந்த வகை பாதிப்புக்குள்ளானவா்கள் எண்ணிக்கை 45-ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளானோரில் 29 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று சென்னையைச் சோ்ந்த ஒருவருக்கு முதன்முதலில் உறுதி செய்யப்பட்டது. அதன் தொடா்ச்சியாக மேலும் 33 பேருக்கு தொற்று பரவியது. அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் கண்டறியப்பட்டன.

அவா்களின் சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டதில் தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

அவா்களில் ஒமைக்ரான் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வந்தவா்கள் 4 போ்; வேறு நாடுகளில் இருந்து வந்தவா்கள் 3 போ்; அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் 4 பேராவா்.

திருவாரூா், கன்னியாகுமரி, திருவண்ணாமலையில் தலா ஒருவா் வீதம் மூன்று போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com