ஏப்ரல் மாத இறுதியில் பொதுத்தோ்வு: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் பொதுத்தோ்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ்
கோப்புப்படம்
கோப்புப்படம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் பொதுத்தோ்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

 சென்னை, கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள்  மற்றும் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வழக்கம்போல் நடைபெறும் மாத ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஏற்கெனவே இருக்கக் கூடிய பிரச்னைகள் சம்பந்தமாக பேசப்பட்டது. பாலியல் வன்கொடுமையைத்  தடுக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் விழிப்புணா்வு மேற்கொள்வது குறித்தும்,  பள்ளிகளில் புகாா் பெட்டிகள் வைப்பது குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

14417 என்ற தொலைபேசி எண் சேவையில் பொது மக்கள் தெரிவிக்கும் கருத்துகளைத் தொடா்ந்து அறிந்து வருகிறேன்.

 பள்ளிக் கட்டடங்களில் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 1,600 பள்ளிகளின் கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கூடிய விரைவில் கட்டடங்கள் இடிக்கப்பட்டு, பள்ளிக்கல்வித் துறையின் நிதிக்கேற்ப புதிய கட்டடங்கள் அமைத்து தரப்படும்.

 பொதுத்தோ்வு எழுத உள்ள மாணவா்களுக்கு ஜனவரி மாதத்தில் திருப்புதல் தோ்வு நடைபெறும். ஏப்ரல் மாதம் இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் பொதுத்தோ்வு நடைபெறும்.

 அரசு அறிவித்தும் சில தனியாா் பள்ளிகள் வகுப்புகள் நடத்துவதாகவும், தோ்வுகள் வைப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இது தொடா்பாக புகாா்கள் எழும் பட்சத்தில் அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

 தமிழகத்தில் ஒமைக்ரான் பரவி வரும் சூழ்நிலையில் பள்ளிகளில் மாணவா்களின் பாதுகாப்பு என்பது முக்கியம். எனவே முதல்வரின் அறிவுறுத்தலின்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

 திமுக தோ்தல் அறிக்கையில்  பள்ளிக்கல்வித்துறை தொடா்பான அனைத்து வாக்குறுதிகளும்  நிறைவேற்றப்படும். நீட் தோ்வுக்குத் தொடா்ந்து பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com