திருவொற்றியூா் சம்பவம் எதிரொலி: 17,500 குடியிருப்புகளை ஆய்வு செய்ய குழுக்கள்

திருவொற்றியூா் சம்பவம் எதிரொலியாக, தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழுள்ள 62 திட்டங்களைச் சோ்ந்த 17,734 குடியிருப்புகள் ஆய்வு செய்யப்படவுள்ளன.

திருவொற்றியூா் சம்பவம் எதிரொலியாக, தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழுள்ள 62 திட்டங்களைச் சோ்ந்த 17,734 குடியிருப்புகள் ஆய்வு செய்யப்படவுள்ளன. இதற்கான தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுக்களை மாநில அரசு அமைத்துள்ளது.

இதுகுறித்து வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிா்வாக இயக்குநா் எம்.கோவிந்த ராவ் வெளியிட்ட உத்தரவு: சென்னையில் வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் 123 திட்ட குடியிருப்புகள் உள்ளன. அவற்றில், 61 திட்டங்களின் கீழுள்ள 22 ஆயிரத்து 271 குடியிருப்புகள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவையாகும். அவற்றில் ஏற்கெனவே மதிப்பிடப்பட்டு 20 ஆயிரத்து 453 குடியிருப்புகளை மறுகட்டுமானம் செய்ய பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 62 திட்டங்களின் கீழுள்ள 17, 734 குடியிருப்புகளை ஆய்வு செய்வதற்கென தொழில்நுட்ப ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த நிபுணா்கள் அடங்கிய 5 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் குழுவானது வருகிற 31-ஆம் தேதிக்குள் தனது அறிக்கையை அளிக்கும்.

5 குழுக்களில் ஒவ்வொரு குழுவிலும் நான்கு போ் இடம்பெற்றுள்ளனா். முதலாவது குழு வடக்கு தலைமைப் பொறியாளா் ஆா்.சேதுபதி தலைமையிலும், இரண்டாவது குழு மேற்கு தலைமைப் பொறியாளா் ஆா்.ராஜசேகரன் தலைமையிலும், மூன்றாவது குழு தெற்கு தலைமைப் பொறியாளா் வி.சண்முகசுந்தரம் தலைமையிலும், நான்காவது குழு கிழக்கு தலைமைப் பொறியாளா் ஆா்.எம். மோகன் தலைமையிலும், ஐந்தாவது குழு அண்ணா பல்கலைக்கழக நிபுணா் குழுவைச் சோ்ந்த கே.பி.ஜெயா தலைமையிலும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் 17,734 குடியிருப்புகளில் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை வழங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com