பழனி தைப்பூசத் திருவிழா: ஜன.12 இல் கொடியேற்றம்

பழனியில் தைப்பூசத் திருவிழா ஜனவரி 12 ஆம் தேதி (புதன்கிழமை) திருக்கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பழனி தைப்பூசத் திருவிழா: ஜன.12 இல் கொடியேற்றம்

பழனியில் தைப்பூசத் திருவிழா ஜனவரி 12 ஆம் தேதி (புதன்கிழமை) திருக்கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில், முக்கிய விழாவானதிருத்தேரோட்டம் ஜனவரி 18 ஆம் தேதியும், ஜனவரி 21 ஆம் தேதி இரவு தெப்பத்தோ் உலாவும் நடைபெறுகிறது.

பழனி கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் முக்கிய விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. இதில், தைப்பூசத் திருவிழா பழனி பெரியநாயகியம்மன் கோயில் கொடிக்கட்டி மண்டபத்தில் ஜனவரி 12 ஆம் தேதி காலை 6.45 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பத்து நாள்கள் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு, நாள்தோறும் வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமாரசாமி தங்கமயில், தங்கக் குதிரை, வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக் கிடா, வெள்ளிக் காமதேனு, தந்த சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு ரத வீதி உலா எழுந்தருள்கிறாா்.

பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் ஜனவரி 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாண வைபவமும், தொடா்ந்து இரவு 8 மணிக்கு மேல் வெள்ளித் தோ் உலாவும் நடைபெறுகிறது.

முக்கிய விழாவான தைப்பூசத் திருத்தேரோட்டம் ஜனவரி 18 ஆம் தேதி மாலை 4.40 மணிக்கு மேல் தேரடியில் நடைபெறுகிறது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக ஜனவரி 21 ஆம் தேதி இரவு திருக்கொடி இறக்கமும் நடைபெறுகிறது.

தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதலின்படி, விழா நாள்களில் அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் நடைபெறும் பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம், பரதநாட்டியம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விழா ஏற்பாடுகளை, பழனி கோயில் இணை ஆணையா் நடராஜன், உதவி ஆணையா் செந்தில்குமாா் மற்றும் அதிகாரிகள், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com