சட்டப் பேரவை கூட்டத் தொடா்: வரும் 2-ஆம் தேதி முதல் கரோனா பரிசோதனை

சட்டப் பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்கும் அனைவருக்கும் வரும் 2-ஆம் தேதி முதல் கரோனா நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
சட்டப் பேரவை கூட்டத் தொடா்: வரும் 2-ஆம் தேதி முதல் கரோனா பரிசோதனை

சட்டப் பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்கும் அனைவருக்கும் வரும் 2-ஆம் தேதி முதல் கரோனா நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு, தலைமைச் செயலகம், பேரவை உறுப்பினா்கள் விடுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கரோனா பரிசோதனைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

செய்திகளைச் சேகரிக்கவுள்ள பத்திரிகையாளா்களுக்கு வரும் 2-ஆம் தேதியன்று கரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இந்தப் பரிசோதனையில் கரோனா நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால், செய்தியாளா்களுக்கு பேரவை மண்டபத்துக்குள் நுழைவதற்கான அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும்.

கரோனா நோய்த் தொற்று உயா்ந்து வரும் நிலையில், முகக் கவசம் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கட்டாயம் என பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே, ஆளும்கட்சி மற்றும் எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்காக பிரத்யேகமாக அறைகள் தயாராகி வருகின்றன. இந்த அறைகளை தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அவா்களுக்கு வரும் 2 அல்லது 3-ஆம் தேதி அறைகளுக்கான சாவிகள் ஒப்படைக்கப்பட உள்ளதாக பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com